நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மண்டல வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நேற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணைத் தேர்தல் ஆணையர் மனோஜ் குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தமிழக காவல்துறை ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
/indian-express-tamil/media/media_files/SZjU0hNUtKTo9ckojyAB.jpg)
இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வாக்குச்சாவடிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைப்போல், இந்த தேர்தலையும் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு: மக்களவைத் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன.முதல்கட்டமாக அவற்றை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளோம். தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை, சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏதும்இல்லை என்பதை கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். அதேபோல் மற்ற மாநிலங்களின் அதிகாரிகளிடமும் சட்டம், ஒழுங்கு குறித்து கேட்டறிந்தனர்.
மாநிலங்களின் சூழல் அடிப்படையில் பொதுவான பல்வேறுஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
மாவட்ட வாரியாக தேவைப்படும் காவல்துறையினர், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்த எண்ணிக்கை அடிப்படையில் போதிய பாதுகாப்பு வசதிகள் கோரப்படும், என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“