திராவிட கட்சிகள் எங்களை ஏமாற்றி விட்டது, பா.ஜ.க வந்தால் எங்கள் கஷ்டங்கள் தீரும் என பா.ஜ.க வேட்பாளரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்த ராஜன் தேர்தலில் போட்டியிடுகிறார், ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்று படுக்கையில் இருக்கும் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சந்தித்து வசந்த ராஜன் வாக்கு சேகரித்தார்.
அப்போது, கோவை மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட இடத்தில் முறையான அனுமதி பெற்று மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் வலை மர்ம நபர்களால் அறுக்கப்பட்டு மீன்கள் திருடப்படுகிறது. இது குறித்து மீனவர்கள் பலமுறை காவல் துறை அதிகாரி இடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை. திராவிட கட்சிகளின் பிரமுகர்களிடம் மனு கொடுத்து அழுத்தம் கொடுத்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நீங்கள் வேட்பாளராக உள்ளதால், எங்கள் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என வேட்பாளர் வசந்த ராஜனிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பா.ஜ.க வேட்பாளர் வசந்த ராஜன் மீனவர்களிடம் கூறுகையில் மத்திய அரசு மீனவர்களுக்கு எல்லா சலுகைகளும் குறிப்பாக படகு வலை மற்றும் பல சலுகைகள் அளித்து வருகிறது. மேலும் நான் வெற்றி பெற்றவுடன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என மீனவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“