தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க, ஓ.பி.எஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில், குமுதம் குழுமம் தமிழ்நாடு, புதுச்சேரியில் கருத்துக் கணிப்பு நடத்தி 40 தொகுதிகளுக்குமான சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தி.மு.க கூட்டணியே தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. தி.மு.க கூட்டணி 27 இடங்களில் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க கூட்டணி 7 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், 6 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). வடசென்னை
2). மத்திய சென்னை
3). தென்சென்னை
4). ஸ்ரீபெரும்புதூர்
5). அரக்கோணம்
6). ஆரணி
7). திருவண்ணாமலை
8). வேலூர்
9). தஞ்சாவூர்
10). தர்மபுரி
11). பெரம்பலூர்
12). தென்காசி
13). கோவை
14) பொள்ளாச்சி
15) தூத்துக்குடி
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). திருவள்ளூர்
2). மயிலாடுதுறை
3). கிருஷ்ணகிரி
4). கடலூர்
5). சிவகங்கை
6). திருநெல்வேலி
7). புதுச்சேரி
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக சிதம்பரம் உள்ளது. அக்கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய தொகுதிகளையும் இரு கட்சிகளும் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). காஞ்சிபுரம்
2). விழுப்புரம்
3). கள்ளக்குறிச்சி
4). சேலம்
5). நாமக்கல்
6). திருச்சி
7). ஈரோடு
இழுபறி நிலவும் தொகுதிகள்
1). ராமநாதபுரம்
2). தேனி
3). நீலகிரி
4). கரூர்
5). விருதுநகர்
6). கன்னியாகுமரி
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று சர்வே முடிவுகள் கூறுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“