/indian-express-tamil/media/media_files/hC3zArNOH9VtK5rCMAcC.jpg)
Madurai
மதுரை, தமிழ்நாட்டின்39 மக்களவைத் தொகுதிகளுள், 32வது தொகுதி ஆகும்.
மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது மதுரை மக்களவை தொகுதி.
1951-52ல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், மதுரை இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதிகளாக இருந்தது. அதில் பொது தொகுதி உறுப்பினராக பாலசுப்ரமணியமும், தலித் தொகுதி உறுப்பினராக கக்கனும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வென்றனர்.
திருப்புமுனை நகரம்
தமிழக அரசியலில் திருப்புமுனை நகரமாகவும், அரசியல் மாற்றத்தை தீர்மானிக்கும் நகராகவும் மதுரை கருதப்படுகிறது. ஒரு காலத்தில் கிராமப்புறங்களையும் உள்ளடக்கிய தொகுதியாக இருந்தமதுரை தொகுதி சீரமைப்புக்கு பிறகு பெருமளவு நகரத்தை மட்டுமே கொண்ட தொகுதியாக மாறி இருக்கிறது.
பல அரசியல் கட்சிகளும், மாநாடு, கூட்டம் என தங்கள் வலிமையை பறைச்சாற்றும் இடமாக மதுரை தொடர்ந்து விளங்கி வருகிறது.
இதுவரை 17 தேர்தல்களை சந்தித்த இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக மற்றும் ஜனதா, அதிமுக, தமாகா தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
அதற்கு அடுத்தபடியாக இடதுசாரி கட்சிகள் வென்றுள்ளன.
இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்களது கட்சியும்
/indian-express-tamil/media/media_files/zEUb6PsqCiS8TpAiyhLj.jpg)
2019 மக்களவைத் தேர்தல்
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மதுரையில் 7 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சி வேட்பாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் 1,39,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவைத் தொகுதி உறுப்பினரானார்.
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வி. வி. ஆர். இராஜ் சத்யன் 3,07,680 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
வாக்காளர்கள் விவரம் (2024)
ஆண் வாக்காளர்கள் - 7,74,381
பெண் வாக்காளர்கள் - 8,02,176
மூன்றாம் பாலினத்தவர் - 188
மொத்த வாக்காளர்கள் - 15,76,745
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.