நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அதிமுக உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து, அறிவித்துள்ளார்.
அந்த குழுவில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் , ஆர். தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024 கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த கீழ்க்காணும் குழு அமைக்கப்படுகிறது.
திரு. R. வைத்திலிங்கம், M.LA, அவர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளர்
முன்னாள் அமைச்சர் திரு. குப கிருஷ்ணன், B.A., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர்
முன்னாள் அமைச்சர் திரு. J.C.D. பிரபாகர் B.A., B. L., Ex. M.L.A., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர்
P.H. மனோஜ் பாண்டியன், M.L., M.L.A., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர்
R. தர்மர், B.A., M.P., அவர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்
வா. புகழேந்தி, B.A., அவர்கள் கழக கொள்கை பரப்புச் செயலாளர்
மருது அழகுராஜ், B.B.A., அவர்கள் கழக கொள்கை பரப்புச் செயலாளர்.
இவ்வாறு ஓ.பி.எஸ். அதில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“