கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி போட்டியிடும் வசந்த ராஜன் வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவளிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குறிப்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது, நான் வெற்றி பெற்றதும் இது விலக்கப்படும். மனித - விலங்கு மோதலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வஞ்சிக்கும் விதமாக தி.மு.க செயல்படுகிறது. குறிப்பாக தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.456 தினசரி கூலியாக வழங்கப்படும் என அரசு ஆணை பிறப்பித்தது, ஆனால் இன்று வரை செயல்பாடு இல்லை, இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் வால்பாறைக்கு மாற்று வழி பாதை அமைக்க, ஆனைமலை புலிகள் காப்பகம் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படும். இதை அடுத்து எஸ்டேட் பகுதிகளில் இரவு நேரங்களில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் அதிகமாக பொருத்தப்படும்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 60 ஆண்டு காலங்கள் தங்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டு செல்லும்போது வீடு இன்றி கீழ்ப்பகுதியில் தவிக்கின்றனர். இதனால் வால்பாறை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு வால்பாறை சுற்றுலா பகுதிகளில் பொதுமக்களிடம் தனக்கு வாக்களிக்குமாறு வசந்த ராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சுகுமாரன், பாரதிய ஜனதா கட்சியின் நகர செயலாளர் பாலாஜி, அ.ம.மு.க நகரச் செயலாளர் நெல்லை செல்வம், ஓ.பி.எஸ் சார்பாக மிக்சர் கடை முருகன், பா.ஜ.க மகளிர் அமைப்பாளர் கனகவள்ளி, ஜெயராமன், சுனில், செந்தில் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“