Lok Sabha Election | Election Commission: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய அவை அமைக்கப்பட வேண்டும். 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Lok Sabha Elections 2024 schedule announced: Check dates, constituency-wise details
இந்த நிலையில், எத்தனை மாநிலங்களில் ஒரே கட்ட தேர்தல், எந்தெந்த மாநிலங்களில் 2 முதல் 7 கட்ட தேர்தல் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
அருணாச்சல பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், டெல்லி, கோவா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கர், அசாம் ஆகிய 2 மாநிலங்களில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, ஜம்மு & காஷ்மீர் ஆகிய 2 மாநிலங்களில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதற் கட்ட தேர்தல் - ஏப்ரல் 19 - 21 மாநிலம் - 102 தொகுதிகள்
ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கும் முதற் கட்ட தேர்தலில், 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதில், அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள் புதுச்சேரி போன்றவை ஆகும்.
2 ஆம் கட்டம் - ஏப்ரல் 26 - 13 மாநிலம் - 89 தொகுதிகள்
ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கும் 2 ஆம் கட்டம் தேர்தல் அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறுகிறது.
3 ஆம் கட்டம் - மே 07 - 12 மாநிலம் - 94 தொகுதிகள்
மே 07 ஆம் தேதி தொடங்கும் 3 ஆம் கட்டம் தேர்தல் அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தாமன் மற்றும் டையூ, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 12 மாநிலங்களில் நடைபெறுகிறது.
4 ஆம் கட்டம் - மே 13 - 10 மாநிலம் - 96 தொகுதிகள்
மே 13 ஆம் தேதி தொடங்கும் 4 ஆம் கட்டம் தேர்தல் ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில் நடைபெறுகிறது.
5 ஆம் கட்டம் மே 20 - 8 மாநிலம் - 49 தொகுதிகள்
மே 20 ஆம் தேதி தொடங்கும் 5 ஆம் கட்டம் தேர்தல் பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 8 மாநிலங்களில் நடைபெறுகிறது.
6 ஆம் கட்டம் மே 25 - 7 மாநிலம் - 57 தொகுதிகள்
மே 25 ஆம் தேதி தொடங்கும் 6 ஆம் கட்டம் தேர்தல் பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் நடைபெறுகிறது.
7 ஆம் கட்டம் ஜூன் 01 - 8 மாநிலம் - 57 தொகுதிகள்
ஜூன் 01ஆம் தேதி தொடங்கும் 7 ஆம் கட்டம் தேர்தல் பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்களில் நடைபெறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Lok Sabha Election Dates 2024 Live Updates
2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் மற்றும் 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். வரும் தேர்தல்களில் 55 லட்சத்திற்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்) பயன்படுத்தப்படும்.
இம்முறை 1.8 கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். இது தவிர, வாக்காளர் பட்டியலில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 82 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேரும், சேவை வாக்காளர்கள் 19.1 லட்சம் பேரும் உள்ளனர். 1,000 ஆண் வாக்காளர்களுக்கு 948 பெண் வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது 2019 தேர்தலின் வாக்காளர்களை ஒப்பிடும் போது 7 கோடி வாக்காளர்கள் அதிகம். 1.8 கோடி வாக்காளர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
தகுதியுள்ள வாக்காளர்களில் 49.7 ஆண்கள், 47.1 கோடி பெண்கள், 48,000 பேர் திருநங்கைகளாகச் சேர்ந்துள்ளனர். 88.4 லட்சம் வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள், 19.1 லட்சம் பேர் சேவை வாக்காளர்கள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.