தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி, வாக்குப்பதிவு நாளன்று, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, ’நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியோக உள்ளோம்.
வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாக்குப் பதிவு நாளன்று தனியார் நிறுவனங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் அளிக்க வேண்டும். அதனை தீவிரமாக அமல்படுத்த தொழிலாளர் நல ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம்.
நேற்று வடசென்னை மக்களவை தொகுதியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக விளக்கம் பெறப்பட்டுள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கு மிகப்பெரிய சவால்கள் இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கக்கூடிய காரணத்தால் தேர்தலில் எந்தவித குளறுபடிகளும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக தேர்தல் நேரத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்து வருகிறது. இதனால் எந்த பிரச்னையுமின்றி தேர்தலை நடத்த முடிகிறது, என்று சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“