தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க, ஓ.பி.எஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில், தந்தி டிவி தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணிக்கு 29 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது.
தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). ஈரோடு
2). தூத்துக்குடி
3). வடசென்னை
4). மத்திய சென்னை
5). நீலகிரி
6). ஆரணி
7) சேலம்
8) பொள்ளாச்சி
9) அரக்கோணம்
10) தென்காசி
11) பெரம்பலூர்
12) காஞ்சிபுரம்
13) தேனி
14) நாமக்கல்
15) தஞ்சாவூர்
16) தர்மபுரி
17) தென்சென்னை
18) திருவண்ணாமலை
19) ஸ்ரீபெரும்புதூர்
20) கோயம்புத்தூர்
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). சிவகங்கை
2). மயிலாடுதுறை
3). திருவள்ளூர்
4) விருதுநகர்
5) திருநெல்வேலி
6) கரூர்
7) கிருஷ்ணகிரி
8) கடலூர்
9) கன்னியாகுமரி
அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). கள்ளக்குறிச்சி
பா.ஜ.க வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). புதுச்சேரி
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
1). திண்டுக்கல்
2) திருப்பூர்
3) மதுரை
4) நாகப்பட்டினம்
சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது.
திருச்சி தொகுதியில் ம.தி.மு.க.,வுக்கு நூலிழையில் வெற்றி வாய்ப்புள்ளது. அ.தி.மு.க கடும் போட்டி கொடுக்கிறது
ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முன்னிலை பெறுகிறது. இரண்டாம் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் வர, அ.தி.மு.க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுகிறது.
வேலூர் தொகுதியில் ஏ.சி சண்முகம் முன்னிலை வகிக்கிறார். கதிர் ஆனந்த் கடும் போட்டி அளிக்கிறார்.
ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், கடும் போட்டி நிலவுகிறது.
வேலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் கடும் இழுபறி நிலவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“