/indian-express-tamil/media/media_files/PK47VDJu7LogQXlFOb2J.jpg)
2019,2021-ம் ஆண்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாக பதிந்த வழக்குகளின் எண்ணிக்கை என்ன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை? தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் எத்தனை? என உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.
மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் கடந்த 2011 தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவில் பழங்காலத்தில் கூட ஜனநாயகம் நிலவியதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை கொடுப்பது ஒரு வகையில் லஞ்சம் தான். இந்த பழக்கம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்து விடும்.
வாக்களார்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்குபவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறைவாக இருப்பதால் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் பழக்கம் குறையாமல் உள்ளது. தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2019 மக்களவைத் தேர்தல், 2021-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை என்ன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை? தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் எத்தனை? இந்த வழக்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் எனக் கூறியும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியும் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.