தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. வாக்குப் பதிவு தொடங்கிய காலையில் மக்கள் ஆர்வமுடன் மக்கள் வந்து வாக்களித்தனர். ஆனால், மதியம் முதல் மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதிக வெயில் காரணமாக மக்கள் மதியம் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும், மாலை 4 மணி முதல் மீண்டும் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வந்தனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் பெரியளவில் எந்த பிரச்னையும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது.
ஆனால், இறுதி வாக்கு சதவீதம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இறுதி வாக்கு எண்ணிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் 39 தொகுதிகளில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தருமபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த முறையை விட இந்த ஆண்டு 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியாக இறுதி வாக்கு சதவீதம்
திருவள்ளூர் - 68.31 சதவீதம்
வட சென்னை - 60.13 சதவீதம்
தென் சென்னை - 54.27 சதவீதம்
மத்திய சென்னை - 53.91 சதவீதம்
ஸ்ரீபெரும்புதூர் - 60.21 சதவீதம்
காஞ்சிபுரம் - 71.55 சதவீதம்
அரக்கோணம் - 74.08 சதவீதம்
வேலூர் - 73.42 சதவீதம்
கிருஷ்ணகிரி - 71.31 சதவீதம்
தருமபுரி - 81.48 சதவீதம்
திருவண்ணாமலை - 73.88 சதவீதம்
ஆரணி - 75.65 சதவீதம்
விழுப்புரம் - 76.47 சதவீதம்
கள்ளக்குறிச்சி - 79.25 சதவீதம்
சேலம் - 78.13 சதவீதம்
நாமக்கல் - 78.16 சதவீதம்
ஈரோடு - 70.54 சதவீதம்
திருப்பூர் - 70.58 சதவீதம்
நீலகிரி - 70.93 சதவீதம்
கோவை - 64.81 சதவீதம்
பொள்ளாச்சி - 70.70 சதவீதம்
திண்டுக்கல் - 70.99 சதவீதம்
கரூர் - 78.61 சதவீதம்
திருச்சி - 67.45 சதவீதம்
பெரம்பலூர் - 77.37 சதவிகிதம்
கடலூர் - 72.28 சதவீதம்
சிதம்பரம் - 75.32 சதவீதம்
மயிலாடுதுறை - 70.06 சதவீதம்
நாகப்பட்டினம் - 71.55 சதவீதம்
தஞ்சாவூர் - 69.18 சதவீதம்
சிவகங்கை - 63.94 சதவீதம்
மதுரை - 61.92 சதவீதம்
தேனி - 69.87 சதவீதம்
விருதுநகர் -70.17 சதவீதம்
ராமநாதபுரம் -68.18 சதவீதம்
தூத்துக்குடி - 59.96 சதவீதம்
தென்காசி - 67.55 சதவீதம்
திருநெல்வேலி - 64.10 சதவீதம்
கன்னியாகுமரி - 65.46 சதவீதம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“