நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற்றது.
தற்போது நிலவரப்படி தமிழக ஸ்டார் தலைவர்களின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் இங்கே
கோவை
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி ஐந்து சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஐந்து சுற்றுகள் முடிவில் மொத்தமாக திமுக 1,27,784 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1,02,784 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 53,811 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி கலாமணி 18,380 வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 106046 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கருப்பையா 50665 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ் 22635 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 19330 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 80827 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்னண் 48187 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மரியா ஜெனிபர் 6547 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 6302 வாக்குகளுடன் நான்காமிடம்.
மத்திய சென்னை
மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 58728 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 29131 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 9600 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன் 6183 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 107210 பெற்று முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 100136 வாக்குகள் வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 39926 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 21445 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
தென்சென்னை
தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 38524 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 20657 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 13212 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்ச்செல்வி 5702 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
நீலகிரி
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 150213 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் எல்.முருகன் 81341 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 69824 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும், உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார் 16661 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
சிதம்பரம்
சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 92356 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் 79298 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 31835 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் இரா.ஜான்சிராணி 13259 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 132223 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி 38896 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 30727 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தமாக வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 30345 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
தருமபுரி
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 126025 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
திமுக வேட்பாளர் ஆ.மணி 106457 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் 85322 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 18039 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.