New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/vck.jpg)
சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி
00:00
/ 00:00
மக்களவை தேர்தல் 2024: விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு; சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி
சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி
மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2019 தேர்தல் வி.சி.க போட்டியிட்ட சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் மீண்டும் வி.சி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த தேர்தலில் களமிறங்கிய திருமாவளவன் மற்றும் ரவிக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் திருமாவளவன் பானை சின்னத்திலும், ரவிக்குமார் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால் இந்த முறை இரண்டு பேரும் பானை சின்னத்திலே போட்டியிடுகின்றனர்..
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6ஆவது முறையாக போட்டியிடுகிறார். அது போல் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 2ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.