1,847 போலீசாருக்கு பணியிட மாற்றம்: திருச்சியில் 80 பேர் மாற்றம்

மக்களவை தேர்தலை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 1,847 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர், மாவட்டம் மற்றும் ரயில்வே போலீசார் உள்பட 80 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 1,847 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர், மாவட்டம் மற்றும் ரயில்வே போலீசார் உள்பட 80 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Lok Sabha polls 1847 policemen get Transfer and in Trichy 80 Tamil News

சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க. சண்முகவடிவேல்

Advertisment

TN Police: நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம் என்பதால் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, தமிழ்நாடு முழுவதும் 1,847 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் திருச்சி மாநகர், மாவட்டம் மற்றும் திருச்சி ரயில்வே போலீசார் உள்பட 80 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Police

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: