திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் : வருகின்ற பொதுத் தேர்தலை ஒட்டி, ஊராட்சி தோறும் சென்று மக்களின் நிறை குறைகளை கேட்க இருக்கின்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
தமிழகத்தில் இருக்கும் 12,617 ஊராட்சிகளில் மக்களை சந்திக்க உள்ளார் மு.க.ஸ்டாலின். ஜனவரி 3ம் தேதியில் இருந்து மக்களிடம் செல்வோ, மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முக்கியமான மூன்று முழக்கங்களை மையமாக வைத்து ஊராட்சி சபை கூட்டங்கள் தொடங்க உள்ளன.
இந்த சபை கூட்டங்களில் திமுக பிரதிநிதிகள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசிச பா.ஜ.க அரசுக்கும், அடிமை அ.தி.மு.க அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, ஊராட்சி தோறும் மக்களைச் சந்திக்கிறது கழகம்!
ஜனவரி 03 முதல் தமிழகத்தின் 12, 617 ஊராட்சிகளிலும் நடைபெறவிருக்கும் கழகத்தின் ‘ஊராட்சி சபைக் கூட்டங்களில்’ தலைமை கழக பிரதிநிதிகள், பேச்சாளர்கள் பங்கேற்பர்! pic.twitter.com/Ki0Exn4eEH
— M.K.Stalin (@mkstalin) 24 December 2018
திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் எப்போது துவங்குகிறது ?
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் இருந்து இந்த பிரச்சாரம் ஆரம்பமாகிறது. நேற்று (24/12/2018 ) நடைபெற்ற அனைத்து நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைத் தொடர்ந்து ஜனவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரையில் இந்த ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும்.
மு.க. ஸ்டாலின் திருவாரூரிலும், கட்சி பொருளாளர் துரைமுருகன் ஈரோடு மாவட்டத்திலும், அக்கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளனர்.
“மக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனங்களை வெல்வோம்”
கழக தலைவர் @mkstalin அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி சபைக் கூட்டத்தை ஜனவரி 3-ம் தேதி தொடங்கி வைக்கிறார். pic.twitter.com/5fImGFPagF
— DMK – Dravida Munnetra Kazhagam (@arivalayam) 25 December 2018
மற்ற மாவட்டங்களில், ஊராட்சியின் பெயர்கள், கலந்து கொள்ள இருக்கும் பிரதிநிதிகள், தேதி, நேரம், விபரம் ஆகிய தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. பாசிச பாஜகவிற்கு எதிராக, ஊர் ஊராக, வீதி வீதியாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.