/indian-express-tamil/media/media_files/04rt4ocDwGPKpFpl2PYF.jpeg)
Coimbatore
கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை இன்று சூலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாப்பம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரை ஆற்றிய அண்ணாமலை, '1972 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் உயிர்நீத்து தியாகிகளாக உள்ள இடத்தில் பிரச்சாரம் செய்வதை மரியாதைக்குறியதாக கருதுகிறேன்.
இன்றைய சூழலில் உலக அளவில் மீண்டும் ஒரு உலகப் போர் வரக்கூடிய நிலை உருவாகி வருகிறது. ரஷ்யா உக்ரேன் போர் நடைபெற்று வருகிறது. இப்போது இஸ்ரேல் ஈரானுக்கு இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
வருங்காலத்தில் சவுதி அரேபியா நாட்டில் போர் பதட்டம் ஏற்படும் என கருதப்படுகிறது. இந்த சூழலில் மூன்றாம் உலகப்போர் வரும் சூழல் உருவாகியுள்ளது.
இதனை தடுக்கும் திறன்கொண்ட உலக தலைவராக மோடி திகழ்கிறார். போர்களை நிறுத்தி உலக அமைதியை கொண்டு வரும் திறன் மோடி அவர்களுக்குத்தான் உள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கான தலைவராக மோடி திகழ்கிறார். அவருடைய பேச்சுக்களும் கருத்துக்களும் உலக அளவில் மதிக்கப்படுகிறது.
எனவே, நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும் உலக அமைதிக்காகவும் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்த தேர்தல் நாட்டை ஆளக்கூடிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
இம்முறை 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பெற்று மோடி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.