Advertisment

Arakkonam Lok Sabha Results 2024: அரக்கோணம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி

மக்களவைத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் 5,63,216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Jegathratchahan, dmk mp

அரக்கோணம் தொகுதி தேர்தல் முடிவுகள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Arakkonam Election Results 2024 Live Update: அரக்கோணம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024

Advertisment

மக்களவைத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் 5,63,216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அரக்கோணம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன்  3,06,559 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அரக்கோணம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் 5,63,216 வாக்குகள் பெற்று 3,06,559 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எல். விஜயன் 2,56,657 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடத்தைப் பிடித்தார்.

பா.ஜ.க கூட்டணி கட்சியான பா.ம.க வேட்பாளர் கே. பாலு 2,02,325 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 3-வது இடம் பிடித்தார்.

இதற்கு அடுத்து, நா.த.க வேட்பாளர் அஃப்ஷியா நஸ்ரின் 98,944 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

பிற்பகல் 3 மணி நிலவப்படி: அரக்கோணம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் 1,58,271 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அ.தி.மு.க வேட்பாளர் எல். விஜயன் 68,425 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.

பா.ம.க வேட்பாளர் கே. பாலு 55,414 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். 

வடதமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மக்களவைத் தொகுதி, அரக்கோணம் (எஸ்சி), சோளிங்கர்,  திருத்தணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி அரக்கோணம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,53,98, இதில் ஆண் வாக்காளர்கள்: 7,56,194, பெண் வாக்காளர்கள்: 7,97,632, மூன்றாம் பாலின வாக்காளர்கள்:163 ஆவார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் 74.19% வாக்குகள் பதிவாகி உள்ளன.

2024 மக்களவைத் தேர்தலில், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் எஸ். ஜெகத்ரட்சகன் உதயசூரியன் சின்னத்திலும், அ.தி.மு.க சார்பில் எல். விஜயன் இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் கே. பாலு மாம்பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ். அஃப்ஷியா நஸ்ரின் மைக் சின்னத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி. பாண்டியன் யானை சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் வரலாறு: 

அரக்கோணம் மக்களவைத் தொகுதி 1977-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் எஸ். ஜெகத்ரட்சகன் 1999, 2009, 2019 என 3 முறை எம்.பி-யாக இருந்துள்ளார். தற்போது அரக்கோணம் தொகுதி சிட்டிங் எம்.பி-யாகவும் உள்ளார்.

15வது மக்களவைத் தேர்தல் (2009)

2009-ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட எஸ். ஜெகத்ரட்சகன் 4,15,041 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

பா.ம.க சார்பில் எதிர்த்து போட்டியிட்ட ஆர். வேலு 3,05,245 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட எஸ். சங்கர் 82,038 வாகுகள் பெற்றார்.

16 வது மக்களவைத் தேர்தல் (2014)

2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட  ஜி. ஹரி 4,93,534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட, என். ஆர். இளங்கோ 2,52,768 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதே போல, பா.ம.க சார்பில் போட்டியிட்ட ஆர். வேலு 2,33,762 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில்  போட்டியிட்ட நாசே ராஜேஷ் 43,960 வாக்குகள் பெற்றார்.

17-வது மக்களவைத் தேர்தல் (2019)

2019-ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், தி.மு.க-வைச் சேர்ந்த எஸ். ஜெகத்ரட்சகன் 6,72,190 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க சார்பில் போட்டியிட்ட ஏ.கே. மூர்த்தி 3,43,234 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட என்.ஜி. பார்த்திபன் 66,826 வாக்குகள் பெற்றார். நா.த.க சார்பில் போட்டியிட்ட பாவேந்தன் 29, 347 வாக்குகள் பெற்றார். ம.நீ.ம சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் 23,179 வாக்குகள் பெற்றார். 

18-வது மக்களவைத் தேர்தல் (2024)

இந்நிலையில், 18-வது மக்களவைத் தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் எஸ். ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க சார்பில் எல். விஜயன் போட்டியிடுகிறார். 

பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் கே. பாலு போட்டியிடுகிறார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ். அஃப்ஷியா நஸ்ரின் போட்டியிடுகிறார். 

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி. பாண்டியன் போட்டியிடுகிறார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment