தொழில்கள் அழிந்த பிறகு வாக்குறுதிகள் கொடுத்து என்ன பிரயோஜனம்- கோவை அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

தொழில்கள் அனைத்தும் அழிந்த பிறகு வாக்குறுதிகள் கொடுத்து என்ன பிரயோஜனம். இதற்கெல்லாம் அண்ணாமலையும் கணபதி ராஜ்குமாரும் பதில் சொல்வார்களா?

தொழில்கள் அனைத்தும் அழிந்த பிறகு வாக்குறுதிகள் கொடுத்து என்ன பிரயோஜனம். இதற்கெல்லாம் அண்ணாமலையும் கணபதி ராஜ்குமாரும் பதில் சொல்வார்களா?

author-image
WebDesk
New Update
Singai Ramachandran

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக், சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisment

அப்போது அவர் பேசியதாவது, அண்ணாமலை போன்றவர்கள் எதற்காக ஐ.பி.எஸ் பணியை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை ஆனால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக சிங்கை ராமச்சந்திரன் தனது பணியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.

எனவே அவரை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Advertisment
Advertisements

அப்போது அவர் பேசுகையில், நூற்றுக்கு 200 சதவீதம் கோவை நாடளுமன்ற தொகுதியில் அண்ணா திமுக வெற்றி பெறும். அண்ணாமலை ஒவ்வொன்றையும் கவன ஈர்ப்புக்காக செய்து வருகிறார். பத்திரிகையாளர்களை அவதூறாக பேசுகிறார்.  அது அவரின் தனிப்பட்ட விவகாரம்.

கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில்  திமுக அரசின்  மின்கட்டண உயர்வால் சிறு குறு தொழில்கள் நசிவடைந்துள்ளன. விசைத்தறிகள் பழைய இரும்புக்கு விற்கப்பட்டு வருகின்றன.

திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் சிறு குறு தொழில்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பாஜகவும், திமுகவும் இதுவரை எதுவும் செய்யாமல் தேர்தல் வந்தவுடன் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தொழில்கள் அனைத்தும் அழிந்த பிறகு வாக்குறுதிகள் கொடுத்து என்ன பிரயோஜனம். இதற்கெல்லாம் அண்ணாமலையும் கணபதி ராஜ்குமாரும் பதில் சொல்வார்களா?

எடப்பாடி பழனிசாமியின் நிழலாக இருந்து செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் வேலுமணி கொங்கு மண்டலம் முழுவதும், நான்கைந்து நாடாளுமன்ற தொகுதிகளை கவனிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருப்பதால் அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: