Advertisment

தமிழகத்தில் காங்கிரஸ் தொகுதி பட்டியல் அறிவிப்பு: புதிதாக இடம்பெற்ற 3 தொகுதிகள்

தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளிலும், புதுச்சேரியுடன் மொத்தமாக 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுறது.

author-image
WebDesk
New Update
lok Sabha polls 2024 DMK alliance Congress Party contesting constituency list Tamil News

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Dmk | Lok Sabha Election | Tamil Nadu Congress: 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடக்கும் வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் 20 ஆம் தேதி  முதல் தொடங்குகிறது.  

Advertisment

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பரபரப்பாக ஈடுப்பட்டுள்ளன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளன. 

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளிலும், புதுச்சேரியுடன் மொத்தமாக 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுறது. இது தொடர்பான ஒப்பந்தம் தி.மு.க. தலைவர், முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  கையெழுத்தானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Congress Dmk Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment