தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முறை தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மும்முனை போட்டி நடைபெற உள்ளது. தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பங்கீடு விவரங்களை அறிவித்த நிலையில் அ.தி.மு.க இன்று தனது கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அறிவித்தது.
அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கட்சி தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தொகுதி பங்கீடு விவரங்களை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். இதில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தே.மு.திகவிற்கு 5 தொகுதிகளும், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல், புதிய தமிழகம் கட்சிக்கு
தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
மேலும், மக்களைத் தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“