Advertisment

2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள், 6 வழக்கறிஞர்கள்: தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் ஓர் அலசல்

அமைச்சர் கே.என் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 DMK MP.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தலில் தி.மு.க 21 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 20) வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

அப்போது தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவரான கனிமொழி தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் வழங்கினார். முன்னதாக பேசிய அவர், "பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களிடம் கருத்துக்கள் பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்க முயன்ற போது தான், தமிழ்நாடு அரசு எவ்வளவு சாதனைகளை படைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துக்களை கேட்டு அறிந்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார். 

இதைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட கனிமொழி எம்.பி., அதனை பெற்றுக் கொண்டார். இதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மோடியின் ஆட்சி இனியும் தொடர்வது நாட்டிற்கு நல்லதல்ல. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது எங்களது வழிகாட்டும் நெறிமுறை. 

 DMK MP1.jpg

கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயக்கம் திமுக. இது திமுகவின் தேர்தல் அறிக்கை அல்ல. தமிழக மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சி மத்தியில் தேவை. 10 ஆண்டுகள் ஆண்ட மோடி தலைமையிலான பாஜக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவின் கட்டமைப்பை சிறுக சிறுக பாஜக அரசு சிதைத்து விட்டது" என்றார். 

தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள்

  • பெட்ரோல் லிட்டர் ரூ.75, டீசல் ரூ.65, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு விற்க நடவடிக்கை.
  • குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத போது, வங்கிகளில் அபராதம் விதிப்பதை தவிர்க்க நடவடிக்கை.
  • சென்னையில் 3-வது ரயில் நிலையம்.
  • மாநிலங்கள் சுயாட்சி பெற அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
  • சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை
  • புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
  • குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாது. இதைத் தொடர்ந்து 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர். வாரிசுகள் அடிப்படையில் பார்த்தால் எதிர்பார்க்கப்பட்டது போலவே அமைச்சர் கே.என் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தவிர கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு 

தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
வட சென்னை - கலாநிதி வீராசாமி
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் - செல்வம்
வேலூர் - கதிர் ஆனந்த்
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
திருவண்ணாமலை - அண்ணாதுரை
ஆரணி - தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி - மலையரசன்
தருமபுரி - மணி
கோவை - கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி
சேலம் - டி.எம்.செல்வகணபதி
ஈரோடு - பிரகாஷ்
நீலகிரி (தனி) - ஆ.ராசா
தஞ்சாவூர் - முரசொலி
பெரம்பலூர் - அருண் நேரு
தேனி - தங்க தமிழ்செவன்
தென்காசி (தனி) - ராணி
தூத்துக்குடி - கனிமொழி

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment