Advertisment

தி.மு.க வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு; முக்கிய அம்சங்கள் இங்கே

மக்களவை தேர்தலில் தி.மு.க போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin ele.jpg

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகள் 19 இடங்களில் போட்டியிடுகிறது. தி.மு.க  21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலுடன், திமுக தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • Mar 20, 2024 15:50 IST
    தி.மு.க தேர்தல் அறிக்கை; சென்னைக்கு 7 முக்கிய அறிவிப்புகள்

    1). சென்னைக்கான மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்
    2). வேளச்சேரி - மவுண்ட் இடையே நீண்டகாலமாக தாமதமாகி வரும் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் 
    3). விம்கோ முதல் எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்யப்படும் 
    4). கோயம்பேடு - அம்பத்தூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் 
    5). கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்படும்
    6). அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் விம்கோ நகர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும் 
    7) மணலி பகுதியில் மாசுபாடு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும்



  • Mar 20, 2024 15:08 IST
    திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் - ஸ்டாலின்

    திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Mar 20, 2024 14:42 IST
    8 தொகுதிகளில் தி.மு.க – அ.தி.மு.க நேருக்கு நேர் போட்டி

    வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி ஆகிய 8 தொகுதிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் நேருக்கு நேர் களமிறங்குகின்றன. அ.தி.மு.க.,வின் அடுத்த பட்டியல் வெளியானால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.



  • Mar 20, 2024 14:16 IST
    இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் - ஸ்டாலின்

    தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்



  • Mar 20, 2024 13:56 IST
    வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள்- மு.க.ஸ்டாலின்

    இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி, சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை விதைக்கலாம் என்ற எண்ணம் பாஜகவுக்கு கனவிலும் வரக்கூடாது;

    புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி;

    ஜூன் 4-ம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள்

    - மு.க.ஸ்டாலின்



  • Mar 20, 2024 13:48 IST
    அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர்

    திமுக கூட்டணிக் கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமா கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள்

    தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்;

    தமிழ்நாட்டோட நலன் முக்கியம் என்று வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்;

    அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும்

    - மு.க.ஸ்டாலின்



  • Mar 20, 2024 13:46 IST
    கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    மக்களவை தேர்தலில் எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்து பொறுப்பாளர்கள் பதில் சொல்ல நேரிடும்

    - திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை



  • Mar 20, 2024 13:29 IST
    செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில்



  • Mar 20, 2024 13:24 IST
    மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேட்டி

    "இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னை மிகவும் கவர்ந்தது"

     -தராசு ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர்



  • Mar 20, 2024 13:08 IST
    11 புதுமுகங்கள் யார் யார்?

    21 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், அவர்கள் போட்டியிடும் தொகுதியினையும் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.,

    இப்பட்டியலில் 11 பேர் புதிய முகங்கள் ஆவர்.

    தருமபுரி: ஆ.மணி

    ஆரணி: தரணிவேந்தன்

    கள்ளக்குறிச்சி: தே. மலையரசன்

    சேலம்: டி.எம். செல்வகணபதி

    ஈரோடு: பிரகாஷ்                           

    கோவை: கணபதி ராஜ்குமார்

    பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி

    பெரம்பலூர்: அருண் நேரு

    தஞ்சாவூர்: முரசொலி

    தேனி: தங்க தமிழ்செல்வன்

    தென்காசி: ராணி ஸ்ரீகுமார்



  • Mar 20, 2024 12:48 IST
    கனிமொழி பேட்டி

    Credit: Sun News



  • Mar 20, 2024 12:32 IST
    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    மக்களவைத் தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது;

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

    தேர்தல் பிரசாரம், தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது போன்றவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்



  • Mar 20, 2024 12:14 IST
    திமுக வேட்பாளர் பட்டியல்- கடந்த முறை வெற்றி பெற்ற 6 பேர் மாற்றம்

    திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 வேட்பாளர்கள் இந்த முறை மாற்றப்பட்டுள்ளனர்.

    புதிய வேட்பாளர்கள்

    தருமபுரி அ.மணி

    சேலம் டி.எம்.செல்வகணபதி

    பொள்ளாச்சி ஈஸ்வரசாமி

    கள்ளக்குறிச்சி மலையரசன்

    தென்காசி ராணி ஸ்ரீகுமார்

    தஞ்சாவூர் ச.முரசொலி

    கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

    தருமபுரி செந்தில் குமார்

    சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன்

    பொள்ளாச்சி சண்முக சுந்தரம்

    தென்காசி தனுஷ் எம்.குமார்

    கள்ளக்குறிச்சி கௌதம சிகாமணி

    தஞ்சாவூர் பழனிமாணிக்கம்



  • Mar 20, 2024 11:46 IST
    திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்

    எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 ரூபாய், டீசல் விலை ரூ.50 ஆக குறைக்கப்படும்.

    ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்றவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

    மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்வி கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.

    ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

    சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.



  • Mar 20, 2024 11:46 IST
    திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்

    தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    வங்கிகளில் குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லாத போது வைக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

    பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது



  • Mar 20, 2024 11:45 IST
    திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்

    புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.

    நாடு முழுவதும் காலை உணவு திட்டம் செயல்படும்.

    தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.



  • Mar 20, 2024 11:45 IST
    திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்

    மாநில முதல்வர்களுடன் ஆலோசனை பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்பட வேண்டும்.

    புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்    

    அனைத்து மாநில மொழிகள் வளர்ச்சிக்கு சம நிதி வழங்கப்படும்.

    தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.



  • Mar 20, 2024 11:40 IST
    மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல

    திமுகவின் தேர்தல் அறிக்கை அல்ல;  தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கை; பாசிச பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மோடி ஆட்சி தொடருவது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டின் கட்டமைப்புகள் சீரழிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவை அனைத்து வழிகளிலும் பாழ்படுத்தியது பாஜக. மாநிலங்களை அரவணைக்கிற ஆட்சி. சமத்துவம், சமர்தமம் கொண்ட ஆட்சி அமைய வேண்டும்.

    - மு.க.ஸ்டாலின்



  • Mar 20, 2024 11:30 IST
    தி.மு.க வேட்பாளர் பட்டியல்

    21 தொகுதிகளுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு 



  • Mar 20, 2024 11:17 IST
    நாடு முழுவதும் உள்ள மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும்

     தி.மு.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் 



  • Mar 20, 2024 11:16 IST
    தி.மு.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்


    முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய கூறுகள். 

     



  • Mar 20, 2024 10:57 IST
    ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்படும்

    மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும். ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 பிரிவு நீக்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.

    நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.காலை உணவு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின் 



  • Mar 20, 2024 10:47 IST
    இது தமிழக மக்களின் தேர்தல் அறிக்கை

    சொன்னதை செய்வோம்...செய்வதை சொல்வோம், கனிமொழி தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளனர். கனிமொழி தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் பல தரப்பினரை சந்தித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    திமுக தேர்தல் அறிக்கை மட்டுமில்லை... தமிழக மக்களின் தேர்தலை அறிக்கை. பத்து வருட பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்ப்படுத்தியுள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

    மத்தியில் அமைய போகும் ஆட்சி, மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம் என அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் ஆட்சி அமைய வேண்டும், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிக்கையாக திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது- ஸ்டாலின் 



  • Mar 20, 2024 10:45 IST
    11 பேர் புது முகங்கள்

    மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களில், 11 பேர் புது முகங்கள்



  • Mar 20, 2024 10:44 IST
    தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    கடந்த முறை போட்டியிட்ட இடங்களிலேயே டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் போட்டி.  21 தொகுதிகளுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டார்.



  • Mar 20, 2024 10:44 IST
    தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    கடந்த முறை போட்டியிட்ட இடங்களிலேயே டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் போட்டி.  21 தொகுதிகளுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டார்.



  • Mar 20, 2024 10:37 IST
    சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை- தி.மு.க தேர்தல் அறிக்கை

    சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை. ஒரே நாடு, தேர்தல் தேர்தல் திட்டம் கைவிடப்படும். ஜி.எஸ்.டி வரி விதிப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும்- தி.மு.க தேர்தல் அறிக்கை 



  • Mar 20, 2024 10:34 IST
    தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு

    தி.மு.க தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டு உரையாற்றி வருகிறார். 



  • Mar 20, 2024 10:19 IST
    தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம்: கனிமொழி

     சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு. திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம் - கனிமொழி



  • Mar 20, 2024 09:53 IST
    தி.மு.க வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

    21 தொகுதிகளுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். 



Dmk Stalin Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment