Advertisment

பா.ஜ.க எம்.எல்.ஏ மருமகன்; ரூ 583 கோடி சொத்து... ஈரோடு அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் பின்னணி

அசோக் குமாரின் தாத்தா காங்கிரஸ் எம்.பி. ஆவார். இவரின் மாமியார் பா.ஜ.க எம்.எல்.ஏ. ஆக உள்ளார். அசோக் குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.7 கோடி டெபாசிட் உள்ளது.

author-image
WebDesk
New Update
richest candidates contesting in the elections from Tamil Nadu

ஈரோடு அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டின் நம்பர் 1 பணக்கார வேட்பாளராக அ.தி.மு.க.வின் ஆற்றல் அசோக் குமார் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.583.48 கோடி ஆகும். இவரின் மனைவி பெயரில் ரூ.69.98 கோடி சொத்துக்கள் உள்ளன.

Advertisment

மேலும் அசோக் குமாரின் தாத்தா காங்கிரஸ் எம்.பி. ஆவார். இவரின் மாமியார் பா.ஜ.க எம்.எல்.ஏ. ஆக உள்ளார். அசோக் குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.7 கோடி டெபாசிட் உள்ளது.

அசையும் சொத்தாக ரூ.526.53 கோடி உள்ளது. அசையா சொத்துக்கள் ரூ.56.95 கோடி உள்ளன. அசோக் குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுபாளையம் ஆகும்.

அசோக் குமாரின் தந்தை கணக்கு பேராசிரியராகவும், தாயார் தமிழ் பேராசிரியராகவும் பணிபுரிந்துளளனர்.

இவர் 992-2005 வரை பல்வேறு வகையான சாப்ட்வேர் கம்பெனிகளை நடத்தியுள்ளார். டி.ஐ.பி.எஸ் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கலவி நிறுவனங்களை இவர் நடத்திவருகிறார்.

இவரை எதிர்த்து தி.மு.க-வின் கே.இ. பிரகாஷ் களம் காண்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment