Advertisment

மும்பை – கன்னியாகுமரி ஸ்பெஷல் ரயில் : மத்திய ரயில்வே அறிவிப்பு: முழு விவரங்கள் உள்ளே

ஏப்ரல் 6 முதல் ஜூன் 3 வரை, மும்பையிலிருந்து – கன்னியாகுமரி-க்கு ஸ்பெஷல் ரயிலை இயக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
ரயில்

ஏப்ரல் 6 முதல் ஜூன் 3 வரை, மும்பையிலிருந்து – கன்னியாகுமரி-க்கு ஸ்பெஷல் ரயிலை இயக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

Advertisment

இந்த வாராந்திர சிறப்பு  ரயில், ரயில்  எண்- 01465, மும்பையின் முக்கிய ரயில் நிலையமான லோக் மானிய  திலக் டர்மினஸ்-யில் இருந்து  மாலை 4 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். ஏப்ரல் 6, 13, 20, 27  மற்றும் மே 4, 11, 18, 25 மற்றும் ஜூ 1 தேதி மும்பையிலிருந்து இயக்கப்படுகிறது. எல்லா வியாக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது

இதுபோல ரயில் எண் – 01466, கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 9.30 மணிக்கு மும்பை செல்லும். ஏப்ரல் 8, 15, 22, 29, மே 6, 13,20, 27 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இது எல்லா சனிக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்பெஷன் ரயில் கோழிக்கோடு, எர்னாகுலம், திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி  உள்ளிட்ட இடங்களின் வழியாக பயணிக்கிறது.

இந்த ரயிலில் ஒரு 2 டயர் ஏசி பெட்டி, மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள், 8 சிலீப்பர் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 செக்கண்ட் கிளாஸ் பெட்டிகள் ( மாற்றுத் திறனாளிகளுக்கு ) இருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment