scorecardresearch

மின் கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்த லாரி: பெரும் விபத்தை தடுத்த இளைஞர்

கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் அட்டை பெட்டிகள் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்தது. லாரி ஓட்டுநர் இறங்கிவிட அங்கிருந்த இளைஞர் ஒருவர் துணிச்சலாக லாரியை அங்கிருந்து எடுத்து ஒதுக்குப் புறமாக நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தடுத்தார்.

lorry fire

கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் அட்டை பெட்டிகள் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்தது. லாரி ஓட்டுநர் இறங்கிவிட அங்கிருந்த இளைஞர் ஒருவர் துணிச்சலாக லாரியை அங்கிருந்து எடுத்து ஒதுக்குப் புறமாக நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தடுத்தார்.

2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயனைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.கோவை கோவில்பாளையத்தில் இருந்து கவுண்ட்ம்பாளையத்திற்கு அட்டைப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது.

லாரியை கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி துடியலூர் அருகே உள்ள செங்காளிபாளையம் பகுதியில் வரும்போது எதிரே வந்த பேருந்துக்கு வழி விடுவதற்காக லாரியை இடது புறமாக திருப்பியுள்ளார்.

அப்போது சாலை ஓரம் இருந்த தனியார் கம்பெனியின் டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் கம்பியில் அட்டைப் பெட்டிகள் உரசியுள்ளது. அப்போது டிரான்ஸ்பார்மரில் பயங்கர சத்தம்  ஏற்பட்டு அட்டைப் பெட்டிகள் தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அருகில் இருந்தவர்கள் எச்சரித்தால் உடனடியாக லாரி ஓட்டுநர் மற்றும் உடன் வந்தவர்கள் கீழே இறங்கி உயிர் தப்பினர்.

சாலையில் நின்ற லாரியில் தீ மளமளவென எரியவே அருகில் செல்லவே  அனைவரும் பயப்பட்ட நிலையில் அங்கிருந்த பாலகிருஷ்ணன் என்ற இளைஞர் துணிச்சலாக தீ எரிந்து கொண்டிருந்த லாரியில் ஏரி லாரியை ஸ்டார்ட் செய்து அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் தனசேகரபாண்டியன் மற்றும் ஹரிராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வந்த 10 க்கும் மேற்பட்ட தீயணப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.

மேலும் ஜேசிபி வாகனம் வரவழைப்பட்டு லாரியில் இருந்த அட்டைப் பெட்டிகளை கீழே இழுத்து போட்டு தீயை அணைத்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Lorry fire and youth help save accdient