Advertisment

லாரிகள் வேலை நிறுத்தம்: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!

வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, பருப்பு வகைகள்

author-image
WebDesk
Jul 21, 2018 09:46 IST
லாரிகள் வேலை நிறுத்தம்: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!

நாடு முழுவதும் நேற்று(20.7.18) தொடங்கிய லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்க சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டு தொகை உயர்யவ கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 20-ந் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனயடுத்து தமிழகம் முழுவதிலுமிருந்து 4.5 லட்சம் லாரிகள் போராட்டத்தில் பங்கேற்று இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, பருப்பு வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டுவருவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும். போராட்டம் நீடிப்பதால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

#Strike
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment