அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு : வட, தென் தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய கூடும்!

தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாம் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன். அப்போது தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக அறிவித்தார். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக வலுப்பெறக்கூடும். எனவே மீனவர்கள் யாரும் தென் அரபிக் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டா என்று அறிவித்தார்.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வினால், வட மற்றும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறினார். தற்போதுள்ள அக்னியின் தாக்கத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அனைவரையும் வாட்டி வதைக்கும் அக்னி சீசனில் மழை பற்றிய செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

×Close
×Close