சென்னையில் 408 தாழ்தள பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம்

சென்னையில் 408 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 408 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bus

தாழ்தள பேருந்துகள் இயக்கம்

சென்னையில் இதுவரை 78 வழித்தடங்களில் 408 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

Advertisment

சென்னையில் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்தள பஸ் சேவை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பஸ்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

இதில் முதல்கட்டமாக 58 தாழ்தள பஸ்கள் கடந்த ஆகஸ்டு மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிலையில், பல்வேறு கட்டங்களாக இதுவரை 408 தாழ்தள பஸ்கள் சென்னை மாநகரில் 78 வழித்தடங்களில் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

transport Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: