ஃபீஞ்சல் புயலைத் தொடர்ந்து கடந்த 17-ம் தேதி வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து அது வலுவிழந்ததாகவும் ஆந்திரா, ஒடிசா நோக்கி நகர்ந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தாழ்வு பகுதி மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி யூ டர்ன் அடித்து வரவுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வலு குறைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. நல்ல மழை மேகங்கள் உள்ளது.
25ஆம் தேதி இரவு / 26ஆம் தேதி காலை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும். இந்த மழை பாதிப்பில்லாதது மற்றும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள மண்டலத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிதமான மழை பெய்தது. இன்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“