Advertisment

லயோலா கல்லூரி ஊழியர் பாலியல் வழக்கு : இழப்பீடு கேட்கும் மகளிர் ஆணையம்

சென்னை லயோலா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண் ஊழியருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
லயோலா கல்லூரி ஊழியர் பாலியல் வழக்கு : இழப்பீடு கேட்கும் மகளிர் ஆணையம்

உலக அரங்கில் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. இதற்காக பல நாடுகளில் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சென்னை லயோலா கல்லூரியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பித்த நிலையில், தனக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லயோலா மேம்பாட்டு அலுவலகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் இரண்டிற்கும் நிர்வாகியாக நியமிக்கப்பட்டவர் கேதரீன். தான்  பணியில் அமர்ந்து சில மாதங்களில், முன்னாள் மாணவர் சங்கத்தின் இயக்குனர் ஃபாதர் சேவியர் அல்போன்ஸ் எஸ்.ஜே என்பவர் மாணவர் சங்கத்திற்கு வந்த ரூ .1 கோடி நிதியை, தனது நம்பிக்கைக்குரிய அரக்கட்டளைக்கு பயனபடுத்தியதை கண்டறிந்துள்ளார். இந்த மோசடி குறித்து கேத்தரின் கல்லூரி அதிபரின் கவனத்திற்குக் கொண்டுசென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கல்லூரி நிர்வாகம்,  நிதி இயக்குநரின் அதிகாரங்கள் குறைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கேத்ரீன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில்,தான் பணியில் அமர்ந்த ஆறு மாதங்களில் அங்கு நடைபெற்ற நிதி மோசடியை கண்டுபிடித்தாக தெரிவித்துள்ளார். கேத்ரீனின் இந்த செயலுக்கு பதிலடியாக, பணியில் இடத்தில் பாலியல் துண்புறுத்தலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநில பெண்கள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் ஆகிய இரண்டிற்கும் அவர் அளித்த மனுவில், நிதி மோசடி தொடர்பாக நான் அளித்த புகாரின்பேரில்,  இயக்குநருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆனால் தற்போது நான் பல துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன். இது குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கேத்ரீன், கடந்த 2014 செப்டம்பரில், பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட தந்தை சேவியர் அல்போன்ஸ் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, நீங்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அறிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளானர். மேலும் பணிக்கான சம்பளத்தை வழங்காத நிர்வாகம் மீண்டும் பணியில் சேரும்போது சம்பளம் வழங்கப்படும் என கூறியுள்ளர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஃபாதர் சேவியர் அல்போன்ஸ் திருச்சியில் உள்ள மற்றொரு ஜோசப் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு மீண்டும் பணிக்கு அழைக்கப்படாத கேத்ரீனுக்கு சம்பளம் வழங்கவும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் வழக்கமான ஊழியர், எந்தவொரு விசாரணையுமின்றி என்னை பணியில் இருந்து நீக்கம் செய்ய முடியாது. என்னை பணிநீக்கம் செய்ததற்கான எந்தவொரு எழுத்துப்பூர்வமான உத்தரவும் வெளியிடாத நிலையில், இந்த பணிநீக்கம் செல்லாது என அறிவிக்க கோரி மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்துள்ள கல்லூரி நிர்வாகம், கேத்ரீன்  ஒப்பந்த அடிப்படையில் பணியில், நியமிக்கப்பட்டதாகவும், அவரது ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் பணியில், விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கேத்ரீன் கூறிய துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி' போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிர்வாகம், முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் அவரது பணி தேவையில்லை என்று கூறியதால், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேத்ரீனுக்கு உதவும் நோக்கில் மாநில மகளிர் ஆணையம் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.  இந்த வழக்கில் தமிழக மாநில பெண்கள் ஆணைய தலைவர் கண்ணகி பாக்யநாதன் தலைமையிலான, குழு  இந்த நிறுவனத்தில், கேத்ரீன் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நவம்பர் மாதம் விசாரணை நடத்தியது. இதில் கடந்த டிசம்பர் 15 ம் தேதி, ஆணையத்தின் உறுப்பினர்கள் நிறுவனத்தை நேரில் பார்வையிட்டனர்,

இதில் நிறுவனம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறிய பல தகவல்கள் தவறானவை என மகளிர் ஆணையத்தால் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு, கல்லூரி நிர்வாகம் மற்றும் தற்போதைய ரெக்டர், பிரான்சிஸ் சேவியர் தனது முதுமை, இயலாமை மற்றும் கொரோனா தொற்று அபாயம் காரணமாக பதிலளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். விதிகளின்படி, கல்லூரியின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போதெல்லாம் கல்லூரி கல்வி இயக்குநரகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

ஆனால்  கேத்ரீன் பணி நீக்கம் செய்யப்பட்டபோது, அத்தகைய அதிகாரப்பூர்வ கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை" என்று டிசம்பர் 22 அன்று தாக்கல் செய்யப்பட்ட ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லயோலா கல்லூரி திடீரென அவரை வேண்டுமென்றே வேலையில் இருந்து தடுத்து நிறுத்தியது மிகவும் தெளிவாக தெரிகிறது, "என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் கேத்ரீன்க்கு ஏற்பட்ட மனஉளைச்சல், உடல் மற்றும் பாலியல் துன்பங்களுக்கு, போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கேத்ரீன் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார். அவரது துன்புறுத்தல் மற்றும் மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், அனுபவித்த துன்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, கேத்ரீன் மொத்தம் ரூ .64 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார், அதில் 24 லட்சம் ஏப்ரல் 2014 முதல் நிலுவையில் உள்ள சம்பளம், மன வேதனை, கொடூரமான வார்த்தைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றிற்கான இழப்பீட்டிற்கு ரூ .25 லட்சம் மற்றும் தன்மீது தாக்கல் செய்யப்பட்ட தவறான புகாருக்கு ரூ .15 லட்சம் என தெரிவித்துள்ளார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் ஊழியர்களின் அவலநிலை, அவர்கள் மீதான அலட்சியப்போக்கே இந்த நிலைமைக்கு காரணம் என கேத்ரீன் மகன் குற்றம் சாட்டியுள்ளார். "சென்னையின் லயோலா கல்லூரியின் நிர்வாகம் சமூக நீதி என்ற கருத்துக்கு எதிரானவர்கள். அவர்களுடைய ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதன் மூலம் அவர்கள் மோசடி செய்ய முடியும் என்றும் நம்புகிறார்கள். பணிநீக்கம் செய்யப்படுதல் பாலியல் ரீதியா துன்புறுத்துதல்  இது குற்றச்சாட்டுகள் நடக்கிறது என தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக லயோலா கல்லூரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Sexual Harassment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment