LPG cylinder delivery affected in Chennai : நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் சென்னையில் பல தெருக்களில் சிலிண்டர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. சில முக்கியமான பகுதிகளில் விநியோகம் ஓரிரு நாள் தாமதமாகிறது என்று டெலிவரி செய்யும் நபர்கள் கூறுகின்றனர்.
காலி சிலிண்டர்களை வாங்கவோ அல்லது சிலிண்டர்களுக்கான பணத்தை பெறவோ வேண்டாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. தொற்று ஏற்படும் அபாயத்தை அறிந்து நாங்கள், வாடிக்கையாளர்களை இ-வாலட்களில் பணம் செலுத்த கூறுகிறோம். மேலும் “பில்”களில் கையெழுத்து வாங்குவதும் இல்லை. ஒரு வாரம் கழித்து தான் நாங்கள் காலி சிலிண்டரை எடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊழியரும் இவ்வாறு 5 வீடுகளுக்கு சென்று காலி சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். இது முந்தையை வேலையைக் காட்டிலும் இரு மடங்காக உள்ளது என்று விநியோகஸ்தர் ஒருவர் கூறினார்.
பாட்டிலிங்க் ஆலைகளில் இருந்து சிலிண்டர்களை பெறுவதிலும் சிக்கல் நிலவி வருவதாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். அங்கும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் இது போன்ற சிக்கல்களை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டது என்று அவர் கூறினார். நிலைமை இப்போது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. பெரும்பாலான ஏஜென்சிகள் சராசரியாக 1.5 நாட்கள் பேக்லாக்கை கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தங்களின் ஊழியர்களுக்காக தடுப்பூசி முகாம்களைஅமைத்தது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அங்கே தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையிலும் பலர் அதில் ஆர்வம் காட்டவில்லை. பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அவர்கள் விடுப்பு எடுக்க வேண்டும் என்று யோசிக்கின்றனர். எனவே விநியோகஸ்தர்கள் அவர்களுக்கு தடுப்பூசிகளின் நன்மை மற்றும் தேவை குறித்துஎடுத்துரைக்க வேண்டும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அலுவலர் ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil