திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வசிக்கும் முத்தமாள் என்பவரின் வீட்டில் இன்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டு, சிலிண்டர் கேஸ் வெடித்தது. இதில், 8 வயது சிறுவன் உள்ளிட்ட 3 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிலிண்டர் வெடித்தபோது, உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் வீடுகளுக்கு இடையே உள்ள சுவர் இடிந்து விழுந்தது. குடியிருப்பு வீட்டில் வாழ்ந்து வந்த காமாட்சி, சிறுவன் ஹேமநாதன் , உறவினர் சந்திரா அம்மாள் ஆகிய மூவரும் சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் காயமடைந்தார் நான்கு பேர் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
முதல்வர் நிதியுதவி:
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி, ஹேமநாதன், சந்திரா அம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலவர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
மேலும், உரிய மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து நேரில் ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.