மீண்டும் அதிர்ச்சியில் மிடில் கிளாஸ் மக்கள்.. எல்பிஜி சிலிண்டர் விலை கடும் உயர்வு!

பிப்ரவரி மாதத்தில் 2-வது முறையாக எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

lpg gas cyclinder lpg gasbooking lpg cyclinder booking
lpg gas cyclinder lpg gasbooking lpg cyclinder booking

lpg gas cylinder lpg gasbooking lpg cylinder booking : சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 2-வது முறையாக எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 4-ம் தேதி மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டரின் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் சிலிண்டர் விலை 594 ரூபாயாக இருந்தது. பின்னர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. பிறகு டிசம்பர் 16ஆம் தேதி மீண்டும் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய விலைக்கு சிலிண்டர் வாங்கினாலும் அதில் கணிசமான தொகை மானியமாக நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை மானியத்துடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் அதிகாரிகள் கூறினர். அதேநேரம், வர்த்தக நோக்கிலான காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை 769 ரூபாயாக உயரும். சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக உயரும்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lpg gas cylinder lpg gasbooking lpg cylinder booking lpg gas price lpg gas booking number

Next Story
News Highlights: தேர்தல் 2021 : அதிமுக, திமுக, ம.நீ.ம விருப்ப மனு தேதிகள் அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com