சென்னையில் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில், மேலும் பல இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் பகுதிகளில், லுலு ஹைப்பர் மார்கெட் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயை தலைமையிடமாக கொண்ட லுலு ஹைப்பர் மார்க்கெட் தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் தனது கிளையை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷெனாய் நகர், சென்னை சென்ட்ரல் மற்றும் விம்கோ நகர் ஆகிய மூன்று ஹைப்பர் மார்க்கெட்கள் அமைக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையை தொடந்து லுலு மார்க்கெட உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பெற்றள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின் கூற்றுப்படி, இது தொடர்பாக அவர்களின் ஒப்பந்ததாரர் கிரேஸ் சர்வீசஸ் லுலு குழுமத்துடன் இணைந்துள்ளது. "பல நிலையங்களில் எங்களிடம் சில உணவு விற்பனை நிலையங்கள் இருந்தாலும், இந்த பிரபலமான ஹைப்பர் மார்க்கெட்கள் கூட்டத்தை ஈர்க்கும் மற்றும் எங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ரயில்வே ஸ்டேஷன் இடத்தில் இதுபோன்ற ஷாப்பிங் மால்கள் வரும்போது, ஷாப்பிங் செய்பவர்கள் விரைவாக வாங்கிச் செல்வதற்கு வசதியாக இருக்கும்,” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
இதில் ஷெனாய் நகரில், மெட்ரோ ரயில் நிலையம் நிலத்தடியில் உள்ளது மற்றும் திரு.வி.க பூங்காவும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் குழந்தைகள் விளையாடும் பகுதி, பூப்பந்து மைதானம் மற்றும் திறந்தவெளி அரங்கம் போன்ற பல வசதிகளுடன் திறக்கப்பட்டது. பல்வேறு சில்லறை விற்பனை மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றைக் கொண்டு சொத்து மேம்பாட்டிற்காக அடித்தளப் பகுதியில் பாரிய இடவசதியுடன் புதிய நிலையம் கட்டப்பட்டது.
இது குறித்து கிரேஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.சார்லஸ் வசந்தகுமார் கூறுகையில், ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் அடித்தளத்தில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும். அதே சமயம், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கான்கோர்ஸ் மட்டத்தில் (அல்லது டிக்கெட் வழங்கும் பகுதி) கட்டப்படும். 40,000 சதுர அடி பரப்பளவில், விம்கோ நகர் டிப்போ ஸ்டேஷனில், கிட்டத்தட்ட 60,000 சதுர அடி இடத்தில் டிப்போ வசதிக்கு மேல் வரும். ஷெனாய் நகரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இந்த வசதியைப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
விம்கோ நகர் மற்றும் சென்னை சென்ட்ரலில், பெரும்பாலும் ரயிலில் இருந்து இறங்கி, கடைக்குச் சென்று, வீடு திரும்பும் பயணிகளாக இருப்பார்கள். ஹைப்பர் மார்க்கெட் அமைக்கும் பணி ஜூலை தொடக்கத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூன்று நிலையங்களிலும் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,'' என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“