இன்று சந்திர கிரகணம்...11 மணி நேரம் மூடப்படும் கோயில்கள் முழு விபரம்!

How to Witness a Lunar Eclipse: 12.13 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் அதிகாலை 4.30 மணி வரையில் நீடிக்க உள்ளது

How to See a Lunar Eclipse: :இன்று நள்ளிரவு 12.13 மணிக்கு முழு சந்திரகிரகணம் தொடங்குகிறது.சந்திர கிரகணத்தை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வெறும் கண்களால் பார்க்கலாம்.

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால் அது சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று நள்ளிரவு 12.13 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் அதிகாலை 4.30 மணி வரையில் நீடிக்க உள்ளது. முழு சந்திர கிரகணம் நிகழ்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், பாதி அளவு சந்திர கிரகணமே நிகழ உள்ளது எனவும் கூறப்படுகிறது.

Lunar Eclipse 2019: சந்திர கிரகணம்- சிலிர்ப்பான சுவாரசியங்கள்

இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆசியாவின் மேற்குப் பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வெறும் கண்களால் சந்திர கிரணகத்தைப் பார்க்கலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கோயில்கள் மூடல்:  chandra grahan july 2019

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சந்திர கிரகணம் காரணமாக கூடுதலாக 11 மணி நேரங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோயில் மாலை 6.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலைப் போல, பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் கோயில், திருப்பரங்குன்றம் கோயில்களும் மாலை 6 மணி முதல் மூடப்படுகின்றன. ஒவ்வொரு கிரகண நேரங்களில் மூடப்பட்டு சிறப்பு பூஜை செய்து மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான்.

புதுவையில் சிறப்பு ஏற்பாடு: Lunar Eclipse 2019!

சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் சந்திரகிரகணத்தை கண்டு ரசிக்க புதுவை அறிவியல் இயக்கத்தினர் மற்றும் புதுவை அரசின் சுற்றுச்சூழல்  அறிவியல் தொழில்நுட்ப  துறையுடன் இணைந்து  புதுவை அப்துல்கலாம் கோளரங்கத்தில் சிறப்பு  ஏற்பாடு செய்துள்ளனர். 16 ஆம் தேதி மாலை தொடங்கி 17 ஆம் தேதி  அதிகாலை வரை நீடிக்கும் சந்திர கிரகணத்தை பற்றி விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்கவுள்ளனர். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த கருத்தரங்கம் அமையும் என  புதுவை அறிவியல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சந்திர கிரகணத்தை உங்கள் குழந்தைகளுடன் பார்த்து ரசிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், சந்திர கிரகணத்தை அருகில் நின்று பார்ப்பது போல் சிறப்பு தொலைநோக்கிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சந்திர கிரகணம் தோன்றும் நேரம் 

இந்தியாவில் நாளை நள்ளிரவு சரியாக 12:13 மணிக்கு ஜூலை 17 சந்திர கிரகணம் தொடங்குகிறது. அதிகாலை 1:31 மணிக்கு உச்சம் அடைந்து, காலை 3 மணிக்கு முடிகிறது. பகுதி நேர சந்திர கிரகணம் 4.29 மணிக்கு முடிகிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close