வங்கிகளில் நூதன மோசடி : சென்னையில் பிரபல கார் ரேசர் கைது

ஒரு வங்கி  ஒதுக்கீடு செய்த பணமதிப்பின் விவரமும், கிரெடிட் வரலாறும் மற்ற வங்கிகளுக்கு தெரியாமல் போனது.

By: November 29, 2020, 3:54:26 PM

2012 ஆம் ஆண்டில் டூரிங் கார் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பி.பாலவிஜய், வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் 3.86 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.

நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் தா.முகம்மது முசாமில் (34), த.அய்யாத்துரை (32), கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பா.பாலவிஜய் (35) ஆகியோா் மோசடி செய்தது தெரியவந்தது

மூவரும் ஃபோர்டு மஸ்டாங், பிஎம்டபிள்யூ போன்ற விலையுர்ந்த கார்களை வாங்குவதற்கு கடன் தரும்படி  ஆறு வங்கிகளை அணுகியுள்ளனர். அதிக வருமானம், சொத்துபத்து தொடர்பான போலி சான்றிதழ்களை ஒரே நேரத்தில் வெவ்வேறு வங்கிகளிடம் சமர்பித்துள்ளனர்.      பாலவிஜய் ரேசர் என்பதால் வங்கிகளும்  உடனடியாக 3.86 கோடி ரூபாய் மேற்பட்ட கடன்களுக்கு ஒப்புதல் அளித்தது.  அனைத்து வங்கிகளும் ஒரேநேரத்தில் கடன் விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டாதால்,   ஒரு வங்கி  ஒதுக்கீடு செய்த பணமதிப்பின் விவரமும், கிரெடிட் வரலாறும் மற்ற வங்கிகளுக்கு தெரியாமல் போனது.

வாராக்கடன் என்று தங்கள் வங்கி கணக்கை சந்தேகிக்க கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் வங்கிகள் கடன்களை ஒப்புதுலை அளிப்பதை இந்த கும்பல் உறுதி செய்தது. ப்ரோக்கர்கள், வங்கி அதிகாரிகளின் உதவிகளையும் இவர்கள் நாடியுள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறியதால், சம்பந்தப்பட்ட  வங்கிகள் அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்தது. அப்போது தான், அவா்கள் மோசடி நபா்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மூவரையும் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Luxury car loan scam chennai racer bank loan fraud

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X