3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை!

இடது கையில், ‘மிஸன் இம்பாஸிபிள்’, வலது கையில் ‘ஹாரிபாட்டர்’ என ஒரே நேரத்தில் வெவ்வேறு இசையை லிடியனால் வாசிக்க முடியும்.

சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியனுக்கு பியானோ வாசிப்பது என்றால், தேனில் ஊற வைத்த ஜாமுன்களை சுவைப்பதைப் போன்று அத்தனை பிரியம்!

இத்தனை சின்ன வயதில் தன்னுடைய இசையால் உலக ரசிகர்களை தன் இசைக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறான். லிடியன் சமீபத்தில் ’தி எல்லன் டி ஜெனரஸ்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, கண்ணில் மாஸ்க் அணிந்துக் கொண்டு, ’மொஸார்டிஸின் துருக்கி பிளைன்ஃபோல்டட்’ இசையை வாசித்தான்.

கண்களை கட்டிக் கொண்டு வாசித்த இசையில் மயங்கிய ரசிகர்கள் எழுந்து நின்று லிடியனுக்கு மரியாதை செலுத்தினார்கள். ”எனக்கு 61 வயதாகி விட்டது, ஆனால் ’மொஸார்ட் பிளைன்ஃபோல்டட்’ என்பதை சரியாக உச்சரிக்கவே என்னால் முடியாது” என எல்லன் டி ஜெனரஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் கேப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது.


லிடியன் நாதஸ்வரத்தின் இரண்டு கைகளிலும் ஏதோ மாயாஜாலம் இருக்கிறது போலும். ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் வெவ்வேறு இசையை அவனால் வாசிக்க முடிகிறது.

அதாவது இடது கையில், ‘மிஸன் இம்பாஸிபிள்’, வலது கையில் ‘ஹாரிபாட்டர்’ இசையை ஒரே நேரத்தில் லிடியனால் வாசிக்க முடியும்.

தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து லிடியனின் சமீபத்திய மியூஸிக் வீடியோ, டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த வயசுல இப்படி ஒரு திறமையா? உலகமே வியந்து பார்க்கும் சென்னை சிறுவன்

இந்த சின்ன வயதில் உலகையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்த, லிடியனுக்கு பீத்தோவனின் மூன்லைட் சொனாட்டா இசையை வாசிப்பது தான் கனவாம்!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close