திராவிட இயக்க தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் பாடலாசிரியர் கண்ணதாசன். பின்னாள்களில் பேரறிஞர் சி.என். அண்ணாத்துரையுடன் பிணக்கு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்து காமராஜர் ஆதரவாளராக திகழ்ந்தார்.
இந்திரா காந்தியையும் ஆதரித்தார். முன்னதாக ஈவிகே சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை தொடங்கினார். தொடர்ந்து, அர்த்தமுள்ள இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதினார்.
இவரது மகன் அண்ணாத்துரை. இவர், தமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார்.
அவருக்கு அண்ணாமலை சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.
தமிழக பாரதிய ஜனதா நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அக்கட்சியில் பல்வேறு நடிகர்-நடிகைகள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“