/indian-express-tamil/media/media_files/Kn7nQk2iKjeUFF3rfbH3.jpg)
"பா.ஜ.க தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது. மக்களை ஏமாற்றும் தந்திரமாக உள்ளது" என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
M H Jawahirullah | Coimbatore:கோவையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பலவற்றை சிதறடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா மேலும் பேசுகையில், "வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தேர்தல் பரப்புரையின் போது காண முடிகிறது
நேற்றைய தினம் பா.ஜ.க-வின் சார்பில் சங்கல்பத்ரா என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை படித்துப் பார்க்கும்போது அது சங்கட பத்ராவாகத் தான் இருக்கின்றது. 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. 2014 ஆம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு 15 லட்சம், 20 லட்சம் ரூபாய் வரை இந்தியர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று பா.ஜ.க-வினர் கூறினர்.
தற்போது உள்ள உள்துறை அமைச்சர், 'அப்போது தேர்தல் நேரத்தில் பேசியதை எல்லாம் ஏன் இவ்வாறு சீரியஸாக எடுத்துக் கொள்கிறீர்கள்' என்கிறார். எனவே, பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
பா.ஜ.க தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது. மக்களை ஏமாற்றும் தந்திரமாக உள்ளது. காங்கிரஸ் அறிக்கை நடைமுறையில் சாத்தியமாக இருக்க கூடியவையாக உள்ளது. காங்கிரஸ் அறிக்கை ஆக்கபூர்வமான அறிக்கை. பா.ஜ.க அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது.
பா.ஜ.க-வினர் எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்து கொண்டு பல்வேறு காரியங்களை செய்யக்கூடியவர்கள். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும். 10 மணிக்கு மேல் மைக்கையும், லைட்டையும் உபயோகிக்க கூடாது. 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்வது சட்ட மீறல். இதனை இந்தியா கூட்டணியினர் செய்தால் விட்டு விடுவார்களா?. கோவை, பொள்ளாச்சி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.