ஸ்டாலின் என்ற பெயர் எனக்கு வைத்த காரணத்தால் பல இடர்களை அனுபவித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisment
சென்னையில் நடந்த தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:1989ல் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சட்டசபை கமிட்டி வாயிலாக எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ரஷ்யா போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் என் முகத்தை உற்று உற்று பார்ப்பர்.
விமான நிலையத்தில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்வர். என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தனர். ஏனென்றால் ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்னைகள் அங்கு இருந்தன. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் 'சர்ச் பார்க் கான்வென்ட்' பள்ளியில் எனக்கும் தங்கை செல்விக்கும் 'அட்மிஷன்' கிடைத்தது. ஆனால் என் பெயரை மட்டும் மாற்ற வேண்டும் என பள்ளி தாளாளர் கூறினார்.,
அதற்கு தலைவர் கருணாநிதி 'பள்ளிக் கூடத்தை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் ஸ்டாலின் பெயரை மாற்ற மாட்டேன்' என்றார்; இது வரலாறு என்று ஸ்டாலின் கூறினார்.
கோரிக்கை : பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்டுங்கள் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.