2024 மக்களவை தேர்தல் வரும் நிலையில் தோல்வி பயத்தால் உந்தப்பட்டு டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து, டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறி வைக்கபபட்டுள்ளார். பாரதிய ஜனதா அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு ஜனநாயக சீரழிவு பாதையில் செல்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சூனிய வேட்டை நடத்துகிறது.
இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது, பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது.
இந்த கைதுகள் நமது உறுதியை வலுப்படுத்துகிறது. இந்தியா கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்துகிறது. மக்கள் கோபத்துக்குள்ளான பா.ஜ.க” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை தொடர்ந்து அழைப்பாணை அனுப்பியது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவருக்கு 9வது முறையாக அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“