Advertisment

மு.க.ஸ்டாலின் எழுச்சிப் பயணம் : நவ.7-ல் மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார், நிறைவு விழாவுக்கு ராகுல் வருகை

மு.க.ஸ்டாலின் எழுச்சிப் பயணத்தை நவம்பர் 7-ம் தேதி மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவுக்கு ராகுல் காந்தி வருகை தர இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
m.k.stalin, dmk, Mamata Banerjee, tamilnadu, bjp

ச.செல்வராஜ்

Advertisment

மு.க.ஸ்டாலின் எழுச்சிப் பயணத்தை நவம்பர் 7-ம் தேதி மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவுக்கு ராகுல் காந்தி வருகை தர இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின், திமுக செயல் தலைவராக மறுபடியும் பிரசார களத்திற்கு வருகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் அவர் நடத்திய பிரசாரம் வரவேற்பை பெற்றது. இந்த முறை தனது பயணத்திற்கு, ‘எழுச்சிப் பயணம்’ என ஸ்டாலின் பெயரிட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் தனது நிகழ்ச்சிகளை பெரும்பாலும் கன்னியாகுமரியில் தொடங்குவது வழக்கம். ஆனால் ‘எழுச்சிப் பயணத்தை’ சென்னையிலேயே தொடங்குகிறார். இதன் தொடக்க நிகழ்ச்சி நவம்பர் 7-ம் தேதி நடக்கிறது. யாரும் எதிர்பாராத வி.ஐ.பி.யாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அதில் கலந்துகொண்டு ஸ்டாலினின் எழுச்சிப் பயணத்தை தொடங்கி வைக்கிறார்.

கடந்த ஜூன் 3-ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பவளவிழாவுக்கு மம்தா பானர்ஜியை ஸ்டாலின் அழைத்திருந்தார். ஆனால் மம்தா தனது பிரதிநிதியை மட்டுமே அனுப்பி வைத்திருந்தார். எனவே இந்த முறை ஸ்டாலின் அழைப்பை மம்தா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் தீவிர பாஜக எதிர்ப்பு அரசியலை செய்து வருபவர் மம்தா. தமிழகத்தில் ஸ்டாலினும் அண்மைகாலமாக பாஜக.வை கடுமையாகவே விமர்சித்து வருகிறார். அந்த அடிப்படையிலும் ஸ்டாலின் அழைப்பை மம்தா விரும்பி ஏற்றதாக கூறப்படுகிறது. மம்தாவின் வருகையை இன்று (அக்டோபர் 20) திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி செய்தார்.

நவம்பர் 7-ம் தேதி எழுச்சிப் பயணத்தை சென்னையில் தொடங்கும் ஸ்டாலின், நவம்பர் 9-ம் தேதி தனது ‘சென்டிமென்ட்’ மாவட்டமான கன்னியாகுமரிக்கு பறக்கிறார். அங்கிருந்து ஆரம்பித்து, ஒரே நாளில் குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரசாரப் பயணத்தை ஸ்டாலின் நடத்துகிறார். மதுரை மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மொத்தம் மூன்றே நாட்களில் அவரது பிரசாரத்தை முடிக்க திட்டமிடப்படுகிறது.

இதேபோல மொத்தம் 5 மண்டலங்களாக தமிழகத்தை பிரித்து, ஒரு மண்டலத்திற்கு தலா 3 நாட்கள் வீதம் ஸ்டாலினின் எழுச்சிப் பயணம் அமையுமாம். வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இந்தப் பயணம் இருக்கும். அந்த வகையில் 5 மண்டலங்களில் மொத்த பயண நாட்கள் 15! இடைவெளி நாட்களை சேர்த்து, 5 வாரங்களில் எழுச்சிப் பயணம் நிறைவுபெறும்.

அதாவது, நமக்கு நாமே பயணத்தைவிட சுருக்கமான பயணமாகவே இந்த எழுச்சிப் பயணம் அமைகிறது. டிசம்பரில் முடியும் இந்த எழுச்சிப் பயணத்தின் நிறைவு விழாவுக்கும் பாஜக-வுக்கு எதிரான தேசியக் கட்சித் தலைவர்களை திரட்டி வர ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். குறிப்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருகை தந்து நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மறுபடியும் தேசியத் தலைவர்களை ஸ்டாலின் திரட்டுவது குறித்து திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘மத்தியில் உள்ள மோடி அரசு ஆதரவுடன் மட்டுமே எடப்பாடி அரசு காலம்தள்ளுவது அனைவரும் அறிந்த சங்கதி! சட்டமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாத சூழலிலும், இந்த ஆட்சியை டெல்லி காப்பாற்றி வருகிறது. இந்த விஷயத்தில் பாஜக-வை அகில இந்திய அளவில் தோலுரிக்க ஸ்டாலின் விரும்புகிறார். அந்த அடிப்படையில்தான் பாஜக எதிர்ப்பு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது’ என்கிறார்கள் அவர்கள்.

தமிழக அரசியல் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் என நடிகர்களை மையம்கொண்டு நகர்வதை தவிர்த்து, திமுக-வை பிரதானப்படுத்தவும் இந்த எழுச்சிப் பயணம் உதவும் என திமுக-வினர் நம்புகிறார்கள்.

 

Bjp Dmk Rahul Gandhi Mamata Banerjee M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment