தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்தார்.
அப்போது, “கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனைமம், ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள், கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
- கௌத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
- கோவை- பொள்ளாச்சி, திருப்பூர்- நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.
- கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடி செலவில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
- தஞ்சாவூர் தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5 கோடியே 21 லட்சத்தில் புதிய ஆய்வுப் பிரிவு உருவாக்கப்படும்.
- ஏரல், கருத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் நிறுவப்படும்.
- சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கௌத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும மீ்ட்புப் பணி நிலையங்கள் அமைக்கப்படும்.
- பேரணாம்பட்டு காவல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் உள்ளிட்ட 100 அறிவிப்புகளை மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“