தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை – கலைஞர் திடலில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறை கேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மக்களின் குறைகள் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்– நேரலை. https://t.co/3fohjPeGSd
— M.K.Stalin (@mkstalin) February 5, 2021
இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அங்கிருந்த மூதாட்டி ஒருவரிடம் துர்கா ஸ்டாலின் பேசிய பேச்சு வைரலாகி வாகிறது.
கலைஞர் மகன் மு. க. ஸ்டாலின் துணைவியார் இவர் தான் என்று மூதாட்டியிடம் அங்கிருந்தவர்கள் துர்கா ஸ்டாலினை அறிமுகப்படுத்தினர். நீங்கள் மிகப் பக்தியாக உள்ளீர்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவார்களா? பெருமாள் மீது நம்பிக்கை உண்டா? என்று மூதாட்டி கேட்டார். அதற்குப் பதிலளித்த துர்கா ஸ்டாலின், ” கண்டிப்பாக வருவார்கள். பெருமாள் மீது மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை உண்டு ” என்று தெரிவித்தார்.
யார் பேசுவது உண்மை pic.twitter.com/M7kWByo6n9
— H Raja (@HRajaBJP) February 6, 2021
வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.