தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க-வின் சார்பில் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க-வின் முக்கிய புள்ளிகள் கலந்துக் கொண்டு, மக்களிடையே உரையாற்றி வருகிறார்கள். அப்படியான ஒரு கிராமசபைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் படி பேசியதாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
இரண்டு கட்சிகளும் எதிரெதிர் முனையில் நின்று ஒருவரையொருவர் விமர்சிக்காத விஷயங்களே இல்லை. எனினும் தற்போது ஸ்டாலின் பேசியிருக்கும் விஷயத்திற்கு, பெரும் அதிருப்தி நிலவியிருக்கிறது. அவர் அப்படி என்ன தான் பேசினார் என்கிறீர்களா?
23, 2019
“அம்மையார் ஜெயலலிதா எதோ மாஸ வச்சுக்கிட்டு ஆட்சி பண்ணிட்டு இருந்தாங்க. ஆட்சில திட்டங்கள செய்றாங்களோ இல்லையோ, ஊழல் பண்றாங்களோ இல்லையோ, அந்தம்மா இருந்ததுல, ஒரு கிளாமர்ல... ஒரு லேடி முதலமைச்சாரா இருக்காங்ககிறதுல அது அப்படியே ஓடுச்சி. தவறுகள் நடந்திருக்கு, ஊழல்கள் நடந்திருக்கு” என மு.க.ஸ்டாலின் பேசியதற்கு தான், “அவர் ஜெயலலிதாவை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை, தமிழக மக்களையே கொச்சைப் படுத்தியிருக்கிறார்” என நெட்டிசன்கள் பலரும் பொங்கி எழுந்துள்ளனர்.
தவிர ஸ்டாலினின் அந்த பேச்சுக்கு, ”மிகவும் கீழ்த்தரமான அரசியல். ஒரு பெண்ணின் வெற்றியை இவ்வளவு கொச்சைப்படுத்தி பேசிய ஸ்டாலினை, தலைவர் என கருதுவோர் வெட்கப்படவேண்டும்”
”மோசமான அரசியல்”
“குறுகிய மனம் படைத்தவர்” போன்ற கமெண்டுகளால் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் ஜெயலலிதா அபிமானிகள்.