Advertisment

சென்னையில் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம்: நிதின் கட்கரி, குலாம்நபி ஆசாத் புகழாரம்

Late DMK Chief Kalaignar M. karunanidhi memorial Meet live update: கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் முக்கிய ஊர்களில் புகழ் வணக்கக் கூட்டங்களை திமுக நடத்துகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
M.karunanidhi memorial Meet, M. karunanidhi memorial Meet live, மு.கருணாநிதி, கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடல், கருணாநிதி நினைவு கூட்டம்

Late DMK Chief M. karunanidhi memorial Meet live update:கருணாநிதி புகழ் வணக்கம் கூட்டம்

Kalaignar M.karunanidhi memorial Meet live: கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில்  தொடங்கியது. துரைமுருகன் வரவேற்றுப் பேசினார். தேசியத் தலைவர்கள் பலரும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிப் பேசினர். மு.க.ஸ்டாலினின் சமூக வலைதளப் பக்கத்தில் ஒளிபரப்பாகும் நேரலையை இங்கும் காணலாம்.

Advertisment

திமுக தலைவர் கருணாநிதி, ஆகஸ்ட் 7-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அரசியல் பாகுபாடு இல்லாமல் பல்வேறு கட்சித் தலைவர்களும் வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் முக்கிய ஊர்களில் புகழ் வணக்கக் கூட்டங்களை திமுக நடத்துகிறது. திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய ஊர்களைத் தொடர்ந்து, இறுதி நிகழ்ச்சியாக ‘தெற்கில் இருந்து உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் இன்று புகழ் வணக்கக் கூட்டம் நடக்கிறது.

இதில் பங்கேற்க தேசியத் தலைவர்கள் பலரும் சென்னை வந்திருக்கிறார்கள். சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இருந்து திமுக தொண்டர்கள் பெருமளவில் நந்தனம் திடலில் திரண்டிருக்கிறார்கள்.

Late DMK Chief  M.karunanidhi memorial  Meet live: கருணாநிதி புகழ் வணக்கம் நிகழ்வின் லைவ் இங்கே:

8:05 PM: ‘இஸ்லாமியர்களுக்கு முதலாவதாக இட ஒதுக்கீடு அளித்த பெருமை கலைஞரை சேரும்’ என குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டார். இறுதியில் மா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

8:00 PM: இறுதியாக குலாம் நபி ஆஸாத் பேசினார். ‘பாஜக. அணியில் இருந்த போதும் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் கலைஞர்’ என பாராட்டினார் அவர்.

8:00 PM: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில், ‘கலைஞர் ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர். வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர்’ என குறிப்பிட்டார்.

7:55 PM: ‘மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த பாடுபட்டவர் கலைஞர்’ என தேவேகவுடா கூறினார்.

7:50 PM: ‘அவசர நிலை எதிர்த்தற்காக கலைஞரின் ஆட்சி அன்று கலைக்கப்பட்டது. கலைஞர் பாரத ரத்னா விருதுக்கு முழு தகுதி உடையவர்’ என பிரபுல்படேல் கூறினார்.

7:40 PM: ஃபரூக் அப்துல்லா பேசுகையில், ‘ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்படக் கூடாது. ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்றார்.

7:35 PM: தேசியவாத காங்கிரஸ் பிரதிநிதியாக கலந்துகொண்ட பிரபுல் படேல் பேசுகையில், ‘தமிழகம் மட்டுமின்றி இந்திய தேசத்துக்கே தலைவராக திகழ்ந்தவர் கலைஞர்’ என குறிப்பிட்டார்.

7:30 PM: ‘சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு பாடுபட்டவர் கலைஞர்’ என சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.

7:25 PM : மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தொடர்ந்து, ஃபரூக் அப்துல்லா பேசினார். வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்தனர்.

7:10 PM: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் பேசுகையில், ‘இங்கு ஆங்கிலத்திலோ, இந்தியிலோ, பெங்காலியிலோ பேச விரும்பவில்லை. தமிழில் பேச விரும்புகிறேன்’ என்றபடி பெங்காலியில் எழுதப்பட்ட தனது தமிழ் உரையை வாசித்தார். ‘கோட்டாட்சியை (கூட்டாட்சியை) வல்றுத்தும் மாநிலக் கட்சிகள் சேந்து இந்தியாவை கைப்பற்றவேண்டும்’ என்றார். ‘நான் ரெடி, நீங்க ரெடியா’ என கூட்டத்தினரை பார்த்துக் கேட்டார்.

‘வாழ்க, வாழ்க, கலைஞர் வாழ்க’ என கோஷம் எழுப்பியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். சோர்ந்து கிடந்த கூட்டத்தை செமையாக உற்சாகப்படுத்திவிட்டு அமர்ந்தார் டெரிக் ஓ பிரையன்.

7:00 PM: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘ நெருக்கடி நிலையை எதிர்த்ததால் கலைஞரும், திமுகவினரும் கொடுமைப்படுத்தப்பட்டனர். கலைஞர் தேசத்தின் தலைவர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது. தேசிய நலனுக்காக தனி திராவிட நாடு கொள்கையை தளர்த்தி கொண்டவர் கருணாநிதி’ என கூறினார்.

6:55 PM: நிதிஷ்குமார் பேசுகையில், ‘ தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டுவரப்படும் என்ற கருணாநிதியின் கொள்கைகளை ஸ்டாலினும் எடுத்து செல்ல வேண்டும்’ என்றார்.

6:45 PM; புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆளுனரால் படும் அவதியை குறிப்பிட்டார். தொடர்ந்து கருணாநிதி முன்வைத்த மாநில சுயாட்சியை ஆதரிப்பதாக கூறினார். இதே தேதியில் தேசியத் தலைவர்களை அழைத்து மாநில சுயாட்சி மாநாடு நடத்த திமுக திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக மீதும் நேரடியாக அரசியல் ரீதியாக தாக்கிப் பேசினார் நாராயணசாமி. தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசினார்.

6:40 PM: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மனோகரா படத்தில் கருணாநிதியின் வசனத்தை கூட்டத்தில் பேசிக் காட்டினார். மெட்ராஸ் என அழைக்கப்பட்ட தமிழக தலைநகருக்கு சென்னை என பெயர் மாற்ற கருணாநிதி எடுத்துக்கொண்ட முயற்சியை சுட்டிக்காட்டிப் பேசினார் அவர்!

6:15 PM: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அவரைத் தொடர்ந்து சந்திரபாபுநாயுடுவின் பிரதிநிதியாக வந்திருந்த சவுத்ரி ஆகியோர் பேசினர்.

6:10 PM: வரவேற்புரை ஆற்றிய துரைமுருகன், ‘கருணாநிதியை தவிர்த்து விட்டு திராவிட இயக்க வரலாற்றை யாராலும் எழுத முடியாது. கருணாநிதி ஒரு அறிவாளி, மெய்மறக்கச் செய்யும் வகையில் பேசும் ஆற்றல் படைத்தவர்!’ என குறிப்பிட்டார். தேசியத் தலைவர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வரவேற்றுப் பேசினார் அவர்!

6:00 PM : கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம் தொடங்கி  நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகும் நேரலையை இங்கு காணலாம்.

5:25 PM: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் தொடங்கியது.

5:00 PM: சற்று நேரத்தில் ‘தெற்கில் இருந்து உதித்தெழுந்த சூரியன்’ என்கிற தலைப்பில் கலைஞர் புகழ் வணக்கக் கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3:55 PM: ராஜ்யசபை காங்கிரஸ் குழுத் தலைவர் குலாம்நபி ஆஸாத் கூறுகையில், ‘மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் ராகுலுக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் நான் பங்கேற்கிறேன். கேரளா சென்று திரும்பிய பிறகு கடுமையான காய்ச்சல் காரணமாக ராகுல் காந்தியால் வர முடியவில்லை’ என்றார்.

M.karunanidhi memorial Meet, M. karunanidhi memorial Meet live, மு.கருணாநிதி, கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம், சென்னை karunanidhi memorial Meet live update:கருணாநிதி புகழ் வணக்கம் கூட்டம் நடைபெறும் திடலை நேற்று இரவு மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

3:50 PM: மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், ‘மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பல்துறை வித்தகர். நவீன தமிழகம், இந்தியா உருவாக பாடுபட்டவர். திமுக மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டது; அண்ணா, கருணாநிதி வழியை பின்பற்றுகிறார் ஸ்டாலின்’ என குறிப்பிட்டார்.

3:40 PM: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலாக பங்கேற்க வந்திருக்கும் சோம்நாத் பார்தி கூறுகையில், ‘தமிழக வளர்ச்சிக்காக கருணாநிதி மேற்கொண்ட பணிகளுக்கு தலை வணங்குகிறேன். கருணாநிதியின் மரபும், வாழ்க்கையும் அனைவருக்கும் ஒரு உதாரணம்’ என்றார்.

3:30 PM: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா சென்னை வந்தார். அவர் அளித்த பேட்டியில், ‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சார்பாக கருணாநிதி நினைவேந்தலில் பங்கேற்கவுள்ளேன்’ என்றார்.

‘மொழி மீது அதிகமான பற்று கொண்டவர் கருணாநிதி. உறுதியான மாநிலமாக தமிழகத்தை உருவாக்க கடுமையாக பாடுபட்டவர் கருணாநிதி’ என்றும் குறிப்பிட்டார்.

3:00 PM: முன்னதாக சென்னை நந்தனத்தில் நிகழ்ச்சிக்கான மேடை மற்றும் ஏற்பாடுகளை நேற்று மாலை திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும், இரவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பார்வையிட்டனர்.

2:45 PM: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று (ஆகஸ்ட் 30) மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக.வின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். புதிய பொருளாளர் துரைமுருகன் வரவேற்றுப் பேசுகிறார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநில முதல்வர்கள் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் சரத் பவார், மம்தா பானர்ஜி ஆகியோரின் பிரதிநிதிகளும் இடதுசாரித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

 

Mk Stalin Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment