கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் மீது கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கடந்த 12 நாள்களாக தலைமறைவாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“