100% பிசினஸில் கவனம் செலுத்த உள்ளேன்: மாஃபா பாண்டியராஜன்

அடுத்த ஐந்து ஆண்டுகள் 100% தொழிலில் கவனம் செலுத்த உள்ளதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

k pandiarajan

அதிமுகவில் தீவிர அரசியல்வாதியாக கடந்த ஐந்து வருடங்கள் பணியாற்றிய க.பாண்டியராஜன் மீண்டும் தொழிலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

CIEL நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் பேசிய பாண்டியராஜன்,” கடந்த 5 ஆண்டுகளில் நான் 100 சதவீதம் அரசியல் பணிகளிலும், அரசுப்பணிகளிலும் ஈடுபட்டேன். அதற்கு முந்தைய ஆண்டுகளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக பணியாற்றினேன். அதனால், வணிகத்தில் 50 சதவீதம் மட்டுமே ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். தற்போது 100 சதவீதம் வணிகத்தில் ஈடுபட உள்ளேன். இருப்பினும், அ.தி.மு.க.வின் உறுப்பினராக நான் எப்போதும் தொடர்வேன்” என்றார்

அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் பாண்டியராஜன். சமீபத்திய சட்டசபை தேர்தலில், ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகள் தனது தொழிலில் கவனம் செலுத்துகிறார். இந்நிறுவனம் 2023-24 ஆம் ஆண்டு ஐபிஓவுக்கு தயாராகி வருகிறது. இதன் மூலம் நாட்டின் திறன் மேம்பாட்டை உறுதி செய்வேன் என கூறியுள்ளார்.

பாண்டியராஜன் 1992ஆம் ஆண்டு ‘மாபா’ என்ற பெயரில், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கினார். பிறகு 2015ஆம் ஆண்டு CIEL என்ற நிறுவனத்தை தொடங்கினார். 2016ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

HR நிறுவனத்தின் முதலீட்டு ஆலோசகர்கள் தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன முதலீட்டாளர்களுடன் ஐபிஓ-க்கு முந்தைய சுற்றில் சுமார் 50-75 கோடி ரூபாய் திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நிதிகளில் பெரும்பகுதி தொழில்நுட்பக் கருவிகளை மேம்படுத்துதல், கையகப்படுத்துதல்களுக்கு நிதியளித்தல், உற்பத்தி மற்றும் தளவாடங்கள் போன்றவற்றிக்கு செலவிடுதல் அவற்றின் இருப்பை வளர்ப்பது மற்றும் வெளிநாட்டு அலுவலகங்களை அமைப்பதை நோக்கி செல்லும்.

CIEL நிறுவனம் சுமார் 180 பணியாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளிகளை கொண்டுள்ளது. மார்ச் 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில் இதன் வருவாய் சுமார் ரூ.305கோடியாகும். இது முந்தைய ஆண்டை விட 9% அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் ரூ.450கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இந்தியாவின் 40 இடங்களில் 54 அலுவலக
ங்களை கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ma foi pandiarajan back into hr business

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com