தமிழ்நாட்டில் புதிய வகை காய்ச்சல் கண்டறியப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது; சீனாவில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதித்து வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறது.
அந்த வகையில், நமது பொதுச் சுகாதாரத்துறையின் மூலம் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால், மிகக் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சீனாவில் இருப்பது மாதிரியான புதிய வைரஸ் காய்ச்சல் எதுவும் தமிழ்நாட்டில் கண்டறியப்படவில்லை. முதல்வர் அறிவுறுத்தலின் படி டெங்கு பாதிப்பு, இன்புளூயன்சா பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“