அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என்றும் இன்று மாலைக்குள் நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்த தகவல் வெளியாகும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேசியதாவது : “ செந்தில் பாலாஜிக்கு மருத்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. இன்று மாலைக்குள் அவருக்கு எந்த மாதிரியான நோய் பாதிப்பு இருக்கிறது என்றும், அதற்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்.
தேசிய மருத்துவ ஆணையம் 2025 – 2026-ல் மீண்டும் 100 இடங்கள் என்று சொல்லியிருப்பது தொடர்பான கேள்விக்கு “ 2025-2026-க்குள் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும், அதை பற்றி இப்போது பேச வேண்டாம்’ என்று கூறினார். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை தொடர்பான கேள்விக்கு “ இது தொடர்பாக பல்வேறு அறிக்கையில் பதில் சொல்லிவிட்டோம். 150 முறை பதில் அளித்துள்ளோம் ” என்று கூறினார்.
” 1,021 மருத்துவர்கள், 983 மருந்து ஆளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், 2, 222 கிராம சுகாதார செவிலியர்கள், இவர்களை பணிக்கு எடுக்கு பணியினை எம்.ஆர். பி அமைப்பு செய்து கொண்டிருக்கிறது. 30-க்கு மேற்பட்ட வழக்குகளில் துறைக்கு சாதகமாக நேற்று தீர்ப்பு வந்திருக்கிறது. பணி நியமனம் முறைபடுத்தும் பணியினை நேற்று இரவே தொடங்கிவிட்டார்கள். ஒரு மாதம் காலத்தில் 5000 பணியிடங்கள் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்தார்.
புதிய மருத்துவ பணியிடங்கள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை வெளியிட்டது தொடர்பாக பேசிய அமைச்சர் “ இந்த அறிவிப்பு செயல்படுத்தினால் தமிழகத்திற்கு புதிய மருத்துவ கல்லூரிகள் வருவது தடைப்படும். தமிழ்நாட்டில் இன்னும் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டி உள்ளது” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“